மூட்டு வலியை நீக்கும் நவீன சிகிச்சை

13 Feb, 2026 | 03:53 PM
image

நாம் ஆயுள் முழுதும் நடக்கவும், மாடிப்படி ஏறி இறங்கவும், பேருந்துகளில் அல்லது புகையிரதங்களில் சௌகரியமாய் அமர்ந்து பயணிக்கவும்,  சம்மணமிட்டு அமர்ந்து பசியாறவும், இப்படி பல வகைகளில் எம்முடைய இரண்டு கால் மூட்டுகளின் பங்களிப்பு அவசியமாகிறது.

முதுமையின் காரணமாக சிலருக்கு மூட்டு வலி பாதிப்பு ஏற்படும்போது அதற்குரிய சிகிச்சைகளைப் பெற திட்ட விடுகிறார்கள். இந்நிலையில் மூட்டு வலி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சைகளைப் பற்றி வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

மூட்டு வலியின் காரணமாக ஒருவரது நாளாந்த கடமைகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டால்.. அப்போதுதான் மூட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்வர். அத்தகைய தருணங்களில் வைத்தியர்களை சந்திக்கும் போது அவர் மூட்டுவலி பாதிப்பின் தன்மையை பிரத்யேக பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிப்பார். உங்களுடைய பாதிப்பு ஒன்று மற்றும் இரண்டாம் நிலைகளில் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டால்.. அவர்களுக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் ஊசி மூலம் மருந்து செலுத்தும் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். 

இத்தகைய தருணத்தில் மருந்தியல் சிகிச்சைகளுடன் பி ஆர் பி எனும் சிகிச்சையையும் ஒருங்கிணைந்து வழங்குவர். வேறு சிலருக்கு ஹைலூரோனிக் அமில சிகிச்சை எனும் நவீன சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.

இத்தகைய சிகிச்சையை மேற்கொண்ட பிறகு எம்முடைய மூட்டுகளின் செயல்பாட்டில் மீண்டும் வலியில்லாமல் இயல்பாக இயங்கும் நிலை மீட்டெடுக்கப்படுகிறது.

இதனுடன் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் இயன் முறை சிகிச்சை மற்றும் நாளாந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது மூட்டு வலியில் இருந்து விரைவாக நிவாரணம் பெறலாம். 

ஆனால் உங்களுடைய மூட்டு வலியின் பாதிப்பு அதிகமானாலோ அல்லது மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் அவதானிக்கப்பட்டாலோ... அவர்களுக்கு சத்திர சிகிச்சை மூலமாக முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

வைத்தியர் ராஜ் கண்ணா தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

க்ளக்கோமா எனும் கண் நீர் அழுத்த...

2026-03-14 15:57:08
news-image

சிறுநீரக கட்டி பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சை

2026-03-13 16:55:47
news-image

மூச்சுத் திணறல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-03-12 17:30:56
news-image

தொண்டை புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-03-11 14:44:38
news-image

இலங்கைச் சுகாதாரத் துறையின் எதிர்காலம்: தனியார்...

2026-03-10 15:46:44
news-image

மௌத் அல்சர் எனும் வாய் புண்...

2026-03-10 15:00:58
news-image

எபிகாஸ்ட்ரிக் வலிக்கான நவீன சிகிச்சை

2026-03-09 14:14:08
news-image

பித்தப்பை கொழுப்பு கட்டி பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-07 17:08:25
news-image

மீண்டும் மீண்டும் ஏற்படும் அரிதான மூளை...

2026-03-06 15:47:00
news-image

பைலெக்டாசிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-05 15:39:37
news-image

ஓகுலோபிளாஸ்ரி எனும் கண் பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-03-04 18:37:34
news-image

பிரியாணியை யார் பசியாற கூடாது..?

2026-03-03 17:16:32