நுவரெலியா, கண்டி மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

13 Feb, 2026 | 03:43 PM
image

(எம்.மனோசித்ரா)

மத்திய மாகாணத்தில் மீண்டும் மழையுடனான காலநிலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை மற்றும் நில்தண்டாஹென பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில் பஹத ஹேவாஹெட்ட பிரதேச செயலகப்பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த சேனதீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதிவாகியுள்ள கடும் மழை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை மற்றும் நில்தண்டாஹென பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருப்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் கண்டி மாவட்டத்தில் பஹத ஹேவாஹெட்ட பிரதேச செயலகப்பிரிவுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் பதிவான மழை வீழ்ச்சியும் இதில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். தற்போதும் வலப்பனை போன்ற பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனவே குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். எனவே ஏதேனும் அபாயமான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மக்கள் உடனடியாக அந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டும்.

கடந்த ஆண்டு சீரற்ற காலநிலை நிலவிய போது பாதுகாப்பான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தாமதிக்காது அவ்வாறான இடங்களுக்குச் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனவே அந்த மாவட்டங்களிலும் ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடனிருக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-14 12:50:54
news-image

பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்கிறது இலங்கை...

2026-07-14 12:49:42
news-image

வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

2026-07-14 12:51:36
news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46