அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஸிம்பாப்வே

Published By: Digital Desk 3

13 Feb, 2026 | 03:50 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில்  அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக ஸிம்பாப்வே   நிர்ணயித்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இரண்டு விக்கெட்களில் பகிரப்பட்ட அரைச் சதங்களைக் கொண்ட இணைப்பாட்டங்கள் ஸிம்பாப்வே அணியை பலப்படுத்தின.

இந்த இரண்டு இணைப்பாட்டங்களிலும் ஆரம்ப வீரர் ப்றயன் பெனெட் முக்கிய பங்காற்றி இருந்தார்.

ப்றயன் பெனெட், தடிவன்ஷே மாருமணி ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் வேகமாக ஓட்டங்களைக் குவித்து அணியை பலப்படுத்தினர்.

அவர்கள் இருவரும் 61 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தடிவன்ஷே மாருமணி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ப்றயன் பெனெட், ரெயான் பியூரி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது மாக்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய பந்தை ரெயான் பியூரி ஓங்கி அடித்தபோது அந்தப் பந்து ஸ்டொய்னிஸில் கையைக் காயப்படுத்தியது.

ஸ்டொய்னிஸ் உடனடியாக சிகிச்சைக்காக களத்தை விட்டு வெளியேறியதும் அவரது ஓவரைப் பூர்த்தி செய்ய அழைக்கப்பட்ட கெமரன் க்றீன் முதல் பந்திலேயே ரெயான் ப்யூரியை ஆட்டம் இழக்கச் செய்தார்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ப்றயன் பெனெட் 56 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத மூன்றாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

கெமரன் க்றீன் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுடகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37