ஓகஸ்ட்டில் வெளியாகும் நானி நடிக்கும் 'தி பாரடைஸ்'

13 Feb, 2026 | 01:08 PM
image

'நேச்சுரல் ஸ்டார்' நானி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில்- அதிரடியான எக்சன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தி பாரடைஸ்' எனும் பான் இந்திய திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஸ்ரீ காந்த் ஓடெலா இயக்கத்தில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படத்தில் நானி, மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்னேஷ் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சி. சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது என்றும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது என்றும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் நானி நடித்திருக்கும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படம் இந்தியாவில் கொண்டாடப்படும் ஓணம் - மீலாது நபி- ரக்ஷா பந்தன்-  ஜன்மாஷ்டமி- ஆகிய விழா நாட்களில் வெளியாவதால் வசூலில் சாதனை படைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25
news-image

வரவேற்பை பெற்று வரும் கென் கருணாஸின்...

2026-03-09 16:09:30
news-image

ஏப்ரலில் வெளியாகும் பரத்- அஜய் கார்த்தி...

2026-03-09 16:01:51
news-image

பெண்மணிகளின் வலிமையையும் , பொறுமையையும் உரக்கப்...

2026-03-09 15:42:22