கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி!

13 Feb, 2026 | 12:17 PM
image

கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன.

குறித்த உணவகத்தில் வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர் ஒருவர்,  தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் எமது உணவகத்திற்கு வந்து சோதனையிட்டனர். காணொளியை வெளியிட்ட நபர் அனைவரதும் கவனத்தை பெறுவதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளது. 

கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் இது குறித்து தெரிவிக்கையில், பம்பலப்பிட்டி உணவக சர்ச்சை குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உணவு மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய உள்ளோம். அந்த உணவகத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18