சீனாவின் ஷாங்காய் நகரில் வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கிய காட்சி பதிவு செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
எந்நேரமும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் அவ்வீதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்கள் ஒரு புறம் வேலை செய்துகொண்டிருந்தபோதே திடீரென அவ்வீதியின் ஒரு பகுதியில் மெல்ல மெல்ல விரிசல் ஏற்பட்டு பின்னர், பாரியதொரு பள்ளம் தோன்றி, வீதி உள்வாங்கப்பட்டது.
கட்டுமானப் பணிகளுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், உபகரணங்கள் அனைத்தும் அந்த பாரிய பள்ளத்துக்குள் விழுந்த பெரும் சேதம் ஏற்பட்டுள்ளமை வீடியோவில் பதிவாகியுள்ளது.
எனினும், இதனால் எவருக்கும் உயிராபத்து நேரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்நகரில் மென்மையான வண்டல் மண், நிலத்தடி நீரை தொடர்ந்து உரிஞ்சிக்கொள்வதாலும் தற்போது அங்கு அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகளாலும் அப்பகுதியில் வீதி உள்வாங்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM