ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார கட்டமைப்பு பாதிப்பு

Published By: Digital Desk 3

13 Feb, 2026 | 11:20 AM
image

ரஷ்யா வியாழக்கிழமை இரவு முழுவதும் உக்ரேன் மீது ட்ரோன்கள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளமையினால் மின்சார கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேனின் மொத்த மின் உற்பத்தித் திறனில் சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை தற்போது செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேனில் தற்போதைய வெப்பநிலை -15°C முதல் -20°C வரை குறைந்துள்ள நிலையில், மின்சாரம் இல்லாதது மக்களைப் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தலைநகர் கீவ் மற்றும் ஒடெசா போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் நாளொன்றுக்கு 03முதல் 04மணி நேரம் மட்டுமே மின்சாரத்தைப் பெறுவதோடு, பல இடங்களில் 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிப்பதாவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த வியூகம் "குளிர்காலத்தை ஒரு ஆயுதமாக" பயன்படுத்துவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

மின்சாரம் இல்லாததால் வீடுகளை சூடாக்கும் வசதி குடிநீர் விநியோகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை முடங்கியுள்ளன.

உக்ரேன் அரசாங்கம் ஆங்காங்கே "நெகிழ்ச்சி புள்ளிகள்" (Resilience Points) என்ற பெயரில் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது. அங்கு மக்கள் தங்கள் கைபேசிகளை சார்ஜ் செய்யவும், உணவைச் சூடாக்கவும், குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடும் குளிரைத் தாங்க முடியாமல் கீவ் போன்ற நகரங்களில் இருந்து சுமார் 06இட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்தத் தாக்குதல்களை "கொடுமையானவை" என்று கண்டனம் தெரிவித்துள்ளன.

சுவீடன் போன்ற நாடுகள் உக்ரேனின் மின்சாரக் கட்டமைப்பைச் சீரமைக்க ஜெனரேட்டர்கள் மற்றும் உதிரிப்பாகங்களை வழங்கி வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42
news-image

போரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் -...

2026-03-11 18:16:56