களுத்துறை பிரதேசத்தில் தனது மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் நகைக் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரான ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் அளுத்கமை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரான ஆசிரியர் தனது மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களின் பெற்றோரிடம் சுமார் 59 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கடனாக வாங்கி ஒரு மாத காலத்தில் திருப்பி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM