பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு, சமூக அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து இந்த ஆண்டில் (2026) விசேட செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
நாட்டின் 12 மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் நலன் கருதி குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளைத் தீர்மானித்து அதிகாரசபை இயங்கி வருவதாகக் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களை அடையாளம் காணுதல், அத்தகைய சம்பவங்களைக் குறைத்தல் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்றன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகள் அதிகமாகப் பதிவாகும் மாவட்டங்களைக் கருத்திற்கொண்டு இந்த 12 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் முதன்மையானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM