இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை பார்வையிட வருகைதருபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

13 Feb, 2026 | 10:22 AM
image

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், 

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடர் மாலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆனால் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயில் பிற்பகல் 03.00 மணி முதல் திறந்து வைக்கப்படும்.

எனவே கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே மைதானத்திற்கு வருகை தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35