போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர் கைது!

Published By: Digital Desk 1

13 Feb, 2026 | 08:55 AM
image

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலாவ பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால், மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 700 கிராம் ஐஸ் போதைப்பொருள், 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனையினூடாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேநேரம், 10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரும், 10 கிராம் 150 மில்லிகிராம் போதைப்பொருளுடன் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொஸ்கம, புவக்பிட்டிய மற்றும் ஹங்வெல்ல பகுதிகளை சேர்ந்த 23, 30 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35