இந்தோனேஷியாவின் மேற்கு கடலோரப் பகுதயில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த பூமியதிர்ச்சி 6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

சுமத்ரா மாகாண தலைநகர் பாடாங்கில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீவில் குறித்த வலிமையான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்பூமியதிர்ச்சினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை இதுவரையில் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப் பூமியதிர்ச்சி ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.