கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு அறிக்கைக்கு அங்கீகாரம் ; கருத்து தெரிவிக்க ஒரு மாத கால அவகாசம் - அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

12 Feb, 2026 | 04:50 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

இலங்கையின் கல்வித் துறையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சபையை நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கென நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத் துணைக் குழுவின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்விச் சபையை நிறுவுவதற்கான பாராளுமன்றத் துணைக் குழுவின் தலைவரும் தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கல்வித் துறையில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி என்னிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத் துணைக் குழுவில் விரிவாக ஆராயப்பட்டதுடன் எமது கருத்துக்களும் ஆலோசனைகளும் ஏற்கனவே அதில் உள்வாங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த அறிக்கை சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டு குழு உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழு அறிக்கையை கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன் அன்றைய தினம் இதற்கான அங்கீகாரம் பெறப்படும்.

அதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கல்விச் சமூகத்தின் நேரடிப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இதன்படி ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இதன்போது கிடைக்கப்பெறும் காத்திரமான ஆலோசனைகள் இறுதி அறிக்கையில் முறையாக உள்வாங்கப்படும்.

இறுதி அறிக்கையானது வெறும் ஆவணமாக மாத்திரம் எஞ்சியிருக்காமல் அதனை ஒரு சட்டமாக நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தினூடாக மிக விரைவாக முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கல்விச் சபையை நிறுவுவதற்கான இந்தப் பாராளுமன்றத் துணைக் குழுவில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் மாப்பலகம கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மஞ்சுள சுரவீர ஆரச்சி மற்றும் சமந்த ரணசிங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருள் வேட்டை:...

2026-03-13 10:06:44
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35
news-image

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கடுமையான சட்டங்கள்:...

2026-03-13 06:05:15