சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே பிரதான தீர்வு - மொரோக்கோ சர்வதேச மாநாட்டில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு

12 Feb, 2026 | 04:37 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

சிறுவர் உழைப்பு என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல அது பல்வேறு அடிப்படை காரணிகளுடன் பின்னப்பட்ட ஒரு சமூகப் பிரச்சினையாகும். எனவே முறையான கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மொரோக்கோவின் மராகேச் நகரில் நடைபெற்று வரும் சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்கான 6ஆவது சர்வதேச மாநாட்டின் (6th Global Conference on the Elimination of Child Labour) ஒரு பகுதியாக இடம்பெற்ற உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகும் சிறுவர் உழைப்பு தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சிறுவர்களின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கே முன்னுரிமை அளித்தது.

குறிப்பாக நெருக்கடி காலங்களில் மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்குத் திரும்புவதை உறுதி செய்யும் வகையில் இலவச பாடசாலை உபகரணங்கள் எழுதுகருவிகள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விசேட உதவித் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது.

சிறுவர் உழைப்பை இல்லாதொழிப்பதற்கான ஒரு நீண்டகாலப் பொறிமுறையாக 2026 ஆம் ஆண்டான இவ்வருடம் முதல் இலங்கையில் புதிய கல்வி மறுசீரமைப்புகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன் கீழ் கல்விப் பாடத்திட்டத்துடன் தொழில்சார் திறன் மேம்பாட்டையும் ஒன்றிணைக்கும் இரட்டை வழி கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சீர்திருத்தங்கள் ஊடாக மாணவர்கள் கல்வி கற்கும் போதே எதிர்காலத் தொழில் சந்தைக்குத் தேவையான தகுதிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதோடு வறுமை காரணமாக மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகுவதையும் தடுக்க முடியும்.

மேலும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவால்களில் இந்த டிஜிட்டல் மயமாக்கல் உற்பத்தித் திறனை அதிகரித்தாலும் அது சிறுவர்கள் மீதான இணைய வழி சுரண்டல்கள் குறித்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் விசேட பிரிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு சர்வதேச பங்காளர்களின் உதவியுடன் டிஜிட்டல் பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

குடும்ப வருமானத்தை உயர்த்துதல் பெரியவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியன அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமைகளாகக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் இத்தகைய ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் பாராட்டப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஆரம்பமான இம்மாநாடு இன்றுடன் நிறைவடையவுள்ளது. இதன் ஆரம்ப அமர்வில் மொரோக்கோ மன்னர் ஆறாம் முகமது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போ மற்றும் மொரோக்கோவின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் யூனிஸ் செக்கூரி ஆகியோர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி...

2026-03-13 10:32:18
news-image

தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர்...

2026-03-13 10:26:58
news-image

பண்டிகைக்கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு இலங்கை...

2026-03-13 10:04:11
news-image

பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

2026-03-13 09:40:50
news-image

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக...

2026-03-13 09:46:12
news-image

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது! 

2026-03-13 09:37:36
news-image

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-03-13 09:07:46
news-image

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;...

2026-03-13 09:07:21
news-image

பொலிஸ் ஊடகப்பிரிவு பணிப்பாளர் பிரடெரிக் வூட்லருக்கு...

2026-03-13 09:06:38
news-image

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது...

2026-03-13 07:52:47
news-image

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு:...

2026-03-13 07:38:48
news-image

இன்றைய வானிலை

2026-03-13 06:08:35