1990களில் இளம் பருவத்தினரிடையே மிகவும் பிரபலமான "டாசன்ஸ் க்ரீக்" நாடகத்தில் நடித்த ஹொலிவூட்ஜேம்ஸ் வான் டெர் பீக், புற்றுநோயுடன் போராடி 48 வயதில் புதன்கிழமை காலமானார்.
"எங்கள் அன்பிற்குரிய ஜேம்ஸ் இன்று (புதன்கிழமை) காலை அமைதியாகப் பிரிந்தார். அவர் தனது கடைசி நாட்களை மிகுந்த தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொண்டார்." என அவரது மறைவை மனைவி கிம்பர்லி சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜேம்ஸ் வான் டெர் பீக்கிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிதி திரட்டும் பக்கத்தில் ஒரு மணித்தியாலத்தில் 2,00,000 டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு, தமக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பதை ஜேம்ஸ் பகிரங்கமாக அறிவித்திருந்தார். வழக்கமான வைத்திய பரிசோதனையின் போது இது கண்டறியப்பட்டது. தனது சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்த விவரங்களைத் தொடர்ந்து தனது ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து வந்தார்.
'டாசன் லீரி' என்ற கதாபாத்திரத்தின் மூலம் 90-களின் இளைஞர்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்தார். கேட்டி ஹோம்ஸ் மற்றும் மிச்செல் வில்லியம்ஸ் ஆகியோருடன் இவர் நடித்த இந்தத் தொடர், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'வார்சிட்டி ப்ளூஸ்' திரைப்படத்தில் குவாட்டர்பேக் வீரராகவும், 'தி ரூல்ஸ் ஆஃப் அட்ராக்ஷன்' படத்தில் ஷான் பேட்மேனாகவும் நடித்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் அவர் நடித்துள்ளார்.
அவரது மறைவுக்கு ஹொலிவூட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை சாரா மிச்செல் கெல்லர் தெரிவிக்கையில், "ஜேம்ஸின் மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு," என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM