மாலைதீவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில், இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை உயர் ஆணையக வளாகத்தில் நடைபெற்ற கொடி ஏற்றும் விழாவில், மாலைதீவில் வசித்து வரும் இலங்கை சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்மத வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மேலும், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் சுதந்திர தினச் செய்திகள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் ஹஸன் உரையாற்றியதுடன், இலங்கை பாரம்பரிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை, இலங்கை மற்றும் மாலைதீவு வர்த்தக சமூகங்களின் மனமார்ந்த அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தூதரக வரவேற்பு நிகழ்வு, பார்செலோ நசந்துரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாலைதீவு அரசுத் துறை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள், உயர்ஸ்தானிகர் அலுவலக பணியாளர்கள் இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லா கலீல் கலந்து கொண்டார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM