எம்மில் பலரும் திடீரென்று தலைவலி, தலைசுற்றல், சோர்வு போன்ற இயல்பான அறிகுறிகளை எதிர்கொள்ளும் போது உடனடியாக நிவாரண சிகிச்சையை பெறுகிறார்கள். ஆனால் இத்தகைய அறிகுறிகள் பொலிசித்தீமியா எனும் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்றும், இத்தகைய அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
எம்முடைய எலும்பு மஜ்ஜையிலிருந்து உற்பத்தியாகும் குருதியில் இடம்பெற்று இருக்கும் சிவப்பு அணுக்கள் இயல்பான அளவை விட கூடுதலாக இருந்தால் அது தீவிர குருதி கோளாறு பாதிப்பாகும். இதனை மருத்துவ மொழியில் பொலிசித்தீமியா பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.
எளிதாக விவரிக்க வேண்டும் என்றால் எம்முடைய குருதி பரிசோதனையின் போது இடம்பெறும் ஹீமோகுளோபின் எனும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கும்.
இதன் காரணமாக குருதியின் தன்மையில் அதாவது அதன் அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டு, குருதியோட்டம் குறைகிறது. இதனால் ரத்த உறைவு மற்றும் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாகிறது. இது பெரும்பாலும் மரபணு மாற்றம் காரணமாகவே உண்டாகுவதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
தலைவலி, தலைசுற்றல், நீராடிய பிறகு குறிப்பிட்ட பகுதியில் அரிப்பு, சோர்வு , கண் பார்வையில் தெளிவின்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் முழுமையான குருதி பரிசோதனையை மேற்கொண்டு ஹீமோகுளோபின் அளவை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
அதன் பிறகு மருந்தியல் சிகிச்சை மற்றும் ஃபிளெபோடோமி எனும் சிகிச்சை மூலமாக இதற்கு நிவாரணத்தை வழங்குகிறார்கள். அதே தருணத்தில் இதனை அலட்சியப்படுத்தினால் இதய செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாதிப்புகள் உண்டாகும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
வைத்தியர் அருணாச்சலம்
தொகுப்பு அனுஷா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM