'எட்டு தோட்டாக்கள் ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக அழுத்தமான அதிரடி எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'பரீட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பரீட் ' எனும் திரைப்படத்தில் வெற்றி, அக்ஷிதா, சாந்தினி தமிழரசன் , பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ஜென்சன் திவாகர் , கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. வி. கிரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். காவல்துறை அதிகாரியின் தொழில் சார்ந்த வாழ்வை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹாரூன் மற்றும் மகேந்தர் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் டீசர் வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பரீட் திரைப்படம்- காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக பணியாற்றும் கதையின் நாயகன் , தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களும், அதனால் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இப்படம் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM