இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை பிரஜைகளுக்கு அழைப்பு!

12 Feb, 2026 | 02:56 PM
image

இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவிலுள்ள மத்திய ஹிந்தி நிறுவனம்  மூலம் ஹிந்தி மொழியை கற்பதற்கு  இலங்கை பிரஜைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

ஹிந்தி மொழியை கற்பதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கல்வி உதவித்தொகையாக திரும்புவதற்கான விமான பயணச்சீட்டு , மாதாந்த உதவித்தொகை , தங்குமிட வசதி மற்றும் வருடாந்த புத்தகக் கொடுப்பனவு  ஆகியவை வழங்கப்படும் எனவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

ஹிந்தி மொழியை கற்பதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகள் 19 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். 

இது குறித்த மேலதிக விபரங்களை www.hcicolombo.gov.in என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து முன்கூட்டியே பூர்த்தி செய்து வைத்துக்கொள்ளுமாறு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

ஹிந்தி மொழியை கற்பதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகள்  மார்ச் 9 ஆம் திகதி  முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம் (இந்திய கலாசார நிலையம்), 16/2, கிரிகோரி வீதி, கொழும்பு 07  இல் இடம்பெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு சமூகம் அளிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது உங்களது கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் ஹிந்தி பயின்றதற்கான சான்றிதழ்களின் பிரதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45