(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது.
இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் ஒரு அணிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையை இலங்கை பதவுசெய்தது.
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் போன்றே ஓமானுடனான போட்டியிலும் ஆரம்ப வீரர்கள் காமில் மிஷார (8), பெத்தும் நிஸ்ஸன்க (13) ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறினர். (42 - 2 விக்.)
குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.
பவன் ரத்நாயக்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 60 ஓட்டங்களைப் பெற்று தவறான அடி தெரிவால் விக்கெட்டைத் தாரைவார்த்தார்.
அடுத்து களம் புகுந்த அணித் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாத் துடுப்பெடுத்தாடி 20 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைக் குவித்து களம் விட்டகன்றார்.
அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழந்தார்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தனது இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பெற்ற குசல் மெண்டிஸ் 45பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.
தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் ஜித்தேன் ராமானந்தி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஓமான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM