சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

Published By: Digital Desk 3

12 Feb, 2026 | 12:50 PM
image

சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும்.

புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு 36 மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இனி வரும் காலங்களில் நீதிமன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி உத்தரவிட்ட 03 மணித்தியாலங்களுக்குள்  அந்தப் பதிவை நீக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் போலி வீடியோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு செய்தி வைரலாகி சமூகப் பதற்றத்தை உருவாக்கும் முன்பே அதை முடக்குவதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய கட்டுப்பாடுகளை செயல்படுவது மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு...

2026-03-13 09:58:02
news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42