பங்களாதேஷில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (12) காலை 7.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. 350 தொகுதிகளைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் தற்போது 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
மேலும், ஒரு தொகுதியில் வேட்பாளர் காலமானதால் அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தலில் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் தாரிக் ரகுமானின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதோடு மேலும் சில கட்சிகளும் களமிறங்கியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கு நடைமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 9.58 இலட்சம் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக 42,779 வாக்களிப்பு நிலையங்களில் 90 வீதமான கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயற்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்ட ஆட்சி நகர்வை தீர்மானிக்கும் விதமாக தற்போது தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM