கோணேசப் பெருமானின் மகாசிவராத்திரி பெருவிழாவும் திருகோணமலை நகர்வலமும்..!

12 Feb, 2026 | 11:21 AM
image

திருகோணமலை தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமையம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழாவும் பெருமானுடைய நகர்வலமும் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (15) மகாசிவராத்திரி பெருவிழா சமய அனுட்டானங்கள் அபிசேஷக ஆராதனைகள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகும்.

மகாசிவராத்திரி பெருவிழா  ஞாயிற்றுக்கிழமை

அன்று இரவு நான்கு ஜாம அபிஷேகங்களும் பூசைகளும் நடைபெறும்

முதலாம் ஜாமம்: மாலை 4:30 மணி (தொடர்ந்து பூசை)

இரண்டாம் ஜாமம்: இரவு 8:30 மணி (தொடர்ந்து பூசை)

மூன்றாம் ஜாமம் (லிங்கோற்பவர் காலம்): இரவு 10:00 மணிக்கு ஆரம்பித்து, நள்ளிரவு 12:00 மணிக்கு பூசை.

நான்காம் ஜாமம்: அதிகாலை 3:00 மணி (தொடர்ந்து விசேட பூசை).

ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை பக்தர்கள் தங்கள் கரங்களால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம்.

திங்கட்கிழமை  திருநகர்வலம் இடம் பெறும்  

பெருமாள் மாதுமை அம்பாள் சமேதராக திருகோணமலை நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வருவார்:

முதல் நாள் (16.02.2026 - திங்கள்): மாலை 4:30-க்கு ஆலயத்தில்  இருந்து புறப்பட்டு, உப்புவெளி, புளியங்குளம் வழியாகச் சென்று பாலையூற்று பாலமுருகன் ஆலயத்தை  சென்றடைவார்.

இரண்டாம் நாள் (17.02.2026 - செவ்வாய்): மாலை 5:30-க்கு பாலமுருகன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, லிங்கநகர், உவர்மலை வழியாக உவர்மலை தெற்கு துர்க்கை அம்மன் ஆலயத்தை  சென்றடைவார்.

மூன்றாம் நாள் (18.02.2026 - புதன்): மாலை 5:00-க்கு துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, சிவபுரி வழியாக விசுவநாதசுவாமி (சிவன்) ஆலயத்தை  சென்றடைவார்.

நான்காம் நாள் (19.02.2026 - வியாழன்): மாலை 5:30-க்கு விசுவநாதசுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்டு, தில்லைநகர், திருநாவுக்கரசு வீதி வழியாக பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை சென்றடைவார்.

ஐந்தாம் நாள் (20.02.2026 - வெள்ளி): மாலை 5:30-க்கு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை சென்றடைவார்.

அலங்காரங்கள் வீதிகளுக்கு குறுக்காக கட்டப்படும் தோரணங்கள் 20 அடிக்கு மேல் உயரமாக இருக்க வேண்டும் என ஆலய நிர்வாகத்தால்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17