சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Published By: Digital Desk 1

12 Feb, 2026 | 01:50 PM
image

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில், பொதுமக்களுக்கு வரும் போலியான மின்னஞ்சல் செய்திகள் குறித்து, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

(Shani Abesekara. Director of the Criminal Investigation Department (CID), Colombo 07, Sri Lanka, NationWide Could, Protection 24/7) எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக, தனிநபர் அல்லது குழுவொன்றால் அண்மைக்காலங்களில் குருஞ்செய்திகள் வருவதனை அவதானிக்கமுடிகிறது.

இவ்வாறான மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டவை அல்ல என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

noucinatacha20@gmail.com police.cid.lk@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட மேற்கண்ட போலி email செய்திகள், பொதுமக்களை ஏமாற்றுதல், பண மோசடி அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பெறுதல் என்ற மோசடி நடவடிக்கைகளுக்கான அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த மின்னஞ்சலை அனுப்பிய  நபர்கள் அல்லது குழுக்கள் பற்றிய தகவல்களைக் கண்டறியவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எனவே, குறித்த மின்னஞ்சல் முகவரிகளினூடாக வரும் செய்திகளின் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18