ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 3

12 Feb, 2026 | 09:37 AM
image

பிரபல  சமூக ஊடகங்களில் ஒன்றான வட்ஸ்அப் செயலியை ரஷ்யாவில் முற்றிலும் முடக்க  அந்நாட்டு அராசாங்கம்  முயற்சித்து வருவதாக மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான 'ரோஸ்கோம்னாட்ஸோர்' வட்ஸ்அப் செயலியை அதன் உத்தியோகபூர்வ இணையக் கையேட்டில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள பயனர்கள் வட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வட்ஸ்அப் செயலியின் 'மெட்டா' (Meta) நிறுவனம் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"ரஷ்ய அரசாங்கம் மக்களை 'MAX' என்ற செயலியை பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக வட்ஸ்அப்பை முடக்கியுள்ளது. இந்த 'மேக்ஸ்' செயலி என்பது பயனர்களைக் கண்காணிக்கவும் உளவு பார்க்கவும் உருவாக்கப்பட்ட  அரசாங்க உளவு செயலி (State-owned surveillance app) ஆகும்." என  மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,

ரஷ்ய சட்டதிட்டங்களுக்கு மெட்டா நிறுவனம் கட்டுப்பட்டால் மட்டுமே, வட்ஸ்அப்பை மீண்டும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

பயங்கரவாதம் மற்றும் மோசடி தொடர்பான தகவல்களைப் பகிர மெட்டா மறுப்பதால், பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

உக்ரேன் மீதான போர் ஆரம்பித்த 2022-ஆம் ஆண்டு முதல், ரஷ்யாவில் பல மேற்கத்திய செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (Twitter) ஆகிய  சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

அப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் (FaceTime) மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் முடக்கப்பட்டன.

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்த அதன் நிறுவனர் பாவெல் துரோவ், "இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய அரசாங்கம் ஊக்குவிக்கும் 'MAX' செயலி, சீனாவிலுள்ள 'வீசாட்' (WeChat) போன்ற ஒரு செயலி ஆகும். 

இது பயனர்களின் இருப்பிடம், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை அரசாங்கம் எளிதாகக் கண்காணிக்க வழிவகுக்கும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள்  எச்சரிக்கின்றனர்.

தற்போதைய சூழலில், ரஷ்யாவில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான வட்ஸ்அப் பயனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு...

2026-03-13 09:58:02
news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42