புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும், அதற்கான அடிப்படை முயற்சிகளைக் கூட அரசாங்கம் முன்னெடுக்கவில்லை - நளின் பண்டார

11 Feb, 2026 | 06:46 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆட்சியேற்று ஓராண்டுக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியினர் தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் மீதான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அண்மையில் இடம்பெற்ற குருநாகல் கூட்டுறவு சங்கத் தேர்தலில் கூட அரச தரப்பு வெற்றி பெறவில்லை. இந்த தோல்விகள் மக்கள் மத்தியில் அரசாங்கம் செல்வாக்கினை இழந்துள்ளமைக்கு சிறந்த சான்றாகும். தேர்தல்களுக்கு பயமில்லை என்று கூறிய அரசாங்கம், இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயங்குகிறது.

தாம் ஆட்சியேற்று ஓராண்டுக்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று இவர்கள் தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். ஆனால் இதுவரை அது குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறிவிட்டது.

இந்த அரசாங்கம் மதத் தலைவர்களையும் சாதாரண குடிமக்களாகவே கருதுகிறது. அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை. ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியோ அல்லது மறுசீரமைப்போ நடைபெறவில்லை. சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் நாட்டின் மின்சாரத் தேவை அதிகரிக்கவில்லை. இது தொழில்துறையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. நெல் கொள்வனவு செய்வதற்கான முறையான திட்டத்தை அரசாங்கம் இதுவரை ஆரம்பிக்கவில்லை. அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 'அரிசி ஆலை மாஃபியாவை' கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. இதனால் நுகர்வோர் அதிக விலைக்கு அரிசியை வாங்க வேண்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்திலும் சபாநாயகர் தொடர்பாகவும் பல்வேறு நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. அரசாங்கம் வெறும் கவிதை மற்றும் வசனங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைச் செயலில் காட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18