மஹிந்த ராஜபக் ஷவை கண்டு இன் றும் பலர் அஞ்சுகின் றனர். பல ஊடகங்கள் இன்றும் மஹிந்த ராஜபக் ஷ மீதான அச்சத்திலேயே செய்திகளை நிராகரித்து வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாம் ஒருபோதும் மஹிந்த தரப்பை கண்டுஅஞ்சவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கடந்த காலத்தில் இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தல்கள் இருந்தன. ஊடகங்கள் மீதான அரசியல் அழுத்தங்கள், அடக்குமுறைகள் காணப்பட்டன . ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலைமைகள் மாற்றம் பெற்றுள்ளது. இன்று அனைவரும் சுதந்திரமாக செயற்படவும், தைரியமாக கருத்து தெரிவிக்கவும் உரிமை உள்ளது. மாகாணசபைகள், பிரதேச சபைகளில் அனைவரும் தமது கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வருகின்றனர். எனினும் தகவல்களை தைரியமாக வெளிபடுத்து  இன்றுவரையில் பல ஊடகங்களுக்கு தைரியம் இல்லாதுள்ளது. 

எனினும் இவ்வாறு இன்றும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நடுநிலையான கருத்துக்களை அனைவரும் தைரியமாக வெளிப்படுத்த முடியும். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என எண்ணம் உள்ளதாக நினைக்கின்றனரோ தெரியவில்லை. 

அவ்வாறு அச்சம் கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அஞ்ச வேண்டும். அவர் இந்த ஆட்சியில் சர்வாதிகார தலைமைகளை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனால் அவர் எவருக்கும் அஞ்சாமல் தைரியமாக செயற்பட்டு வருகின்றார். ஆகவே எவரும் அஞ்சத் தேவையில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று எவரதும் தனிப்பட்ட தலையீடுகள் இல்லாது சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றது. ஜனநாயக ரீதியில் அனைவரும் தமது எண்ணங்களை முன்வைக்கவும் ஆலோசித்து பொதுவான தீர்மானம் ஒன்றை எடுக்கவும் இன்று சுதந்திரம் உள்ளது. ஆகவே அனைவரும் தைரியமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.