சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து சட்ட நடவடிக்கை எடுங்கள் - ஹர்ஷன நாணயக்கார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

11 Feb, 2026 | 05:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய  தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகும்.

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் இந்த செயற்பாடு குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாட்டு தகவல்களை எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்ற முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானியாக பதவி வகித்த சமிந்த குலரத்ன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்ம்  சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமிர கால்லகே ஆகியோருக்கு  எதிராக ஊழல் குற்றத்துக்கு அமைய 2026.02.02 ஆம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

அதேபோல் இந்த முறைப்பாடு குறித்து பூரணமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

 சபாநாயகருக்கும், அவரது தனிப்பட்ட செயலாளருக்கு எதிராகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய  தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 1 ஆவது பந்தியின் 3(5) பிரிவு, 125 மற்றும் 127 ஆகிய பிரிவுகளுக்கமைய ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ள  சந்தர்ப்பத்தில் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் அறிக்கை கோருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆணைக்குழுவின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கருதுகிறோம்.அதற்கமைய, 2026.02.06 ஆம் திகதியன்று சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்த கடிதத்தை பாராளுமன்றத்துக்கு சபைப்படுத்தியுள்ளேன்.(அந்த கடிதத்தை இந்த கடித்ததுடன் இணைத்துள்ளேன்).

சபாநாயகர் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அந்த முறைப்பாடுகளுக்கு உரிய சாட்சிகளை மறைப்பதற்கும், மாற்றுவதற்கும் அல்லது சாட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கும் முயற்சிக்கப்படும் என்பது சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் செயற்பாடுகள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்த தகவல் கோரல் கடிதம் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடு தகவல் தொடர்பில் எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18