ஒவ்வொரு வீட்டில் வாழும் கணவனும், மனைவியும் தான் அந்த வீட்டினை ஆற்றலுடன் வழிநடத்தும் முதன்மையான சக்திகள். இவர் தங்களுக்குள் விவரிக்க இயலாத சிறிய விடயங்களுக்காக 'ஈகோ'வுடன் நடக்க தொடங்கி.. கருத்து வேறுபாடுகளை விரிவுபடுத்தி.. ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ளாமல்.. ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால்.. அந்த வீட்டில் எதிர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதனை எப்படி நீக்குவது ?என்பது குறித்த பிரத்யேக குறிப்புகளையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அளித்திருக்கிறார்கள்.
ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்தால்.. அந்த வீட்டில் சமையலறையில் பால் காய்ச்சும் போது கவனித்துக் கொண்டிருந்தாலும் ...பால் பொங்கி வழியும். வீட்டிற்குள் பொங்கல் வைத்தாலும் அவை மணத்துடன் கூடிய சுவையை துல்லியமாக வழங்காது. இவற்றை அறிகுறியாக எடுத்துக்கொண்டு அந்த வீட்டு பெண்மணி தன் கணவருடன் ஈகோவை விட்டுவிட்டு.. பேச்சுவார்த்தை நடத்தி.. சமரசமாகி, வாழ்க்கையை நடத்த தொடங்க வேண்டும். கணவனும் விட்டுக் கொடுக்கும் தன்மையை உறுதியாக கடைப்பிடித்து , மனைவியுடன் சமரசமாகி மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்த தொடங்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து நாளாந்தம் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வெண் கடுகு + குங்கிலியம் கலந்த சாம்பிராணி புகையை பரவச் செய்ய வேண்டும். அத்துடன் சிறிதளவு வெண் கடுகை எடுத்து அதனை மஞ்சள் வண்ண துணியில் முடித்து, நிலை வாசலில் கட்டி விட வேண்டும். இதனை தொடர்ந்து மேற்கொள்ளும் போது எதிர்மறை ஆற்றல்கள் மெல்ல விலகத் தொடங்கி.. நாளடைவில் நேர் நிலையான ஆற்றல் பரவத் தொடங்கும். தம்பதிகளும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துவார்கள். அவர்களை பின்பற்றி அவர்களது வாரிசுகளும் சந்தோஷத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்வர்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM