இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின் ' சைலப்பன் சைக்கிள் மார்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

11 Feb, 2026 | 05:06 PM
image

தயாரிப்பாளர் - நடிகர் இசக்கி கார்வண்ணன் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சைலப்பன் சைக்கிள் மார்ட்' என பெயரிடப்பட்டு , அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் சர்வதேச அடையாளமாக திகழும் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருக்கிறார்.

எழுத்தாளர் -கவிஞர் -இயக்குநர் - சுகா இயக்கத்தில் உருவாகி வரும் 'சைலப்பன் சைக்கிள் மார்ட்' எனும் திரைப்படத்தில் இசக்கி கார்வண்ணன், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், பூஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மார்ட்டின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் போக்குவரத்து சாதனமான மிதிவண்டியை பழுது நீக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளியின் வாழ்வியலை யதார்த்தமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சைக்கிள் சக்கரத்தின் ஊடாக உலகத்தை வித்தியாசமாக காட்சிப்படுத்தி இருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25
news-image

வரவேற்பை பெற்று வரும் கென் கருணாஸின்...

2026-03-09 16:09:30
news-image

ஏப்ரலில் வெளியாகும் பரத்- அஜய் கார்த்தி...

2026-03-09 16:01:51
news-image

பெண்மணிகளின் வலிமையையும் , பொறுமையையும் உரக்கப்...

2026-03-09 15:42:22