(செ.சுபதர்ஷனி)
நாட்டிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது மருந்து மீளாய்வுக் கூட்டங்களை நடத்துவது அவசியம் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலில், நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு செவ்வாய்க்கிழமை (10) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைத் குறிப்பி்ட்டார்.
பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதத்திற்கு ஒரு முறையாவது மருந்து மீளாய்வுக் கூட்டங்களை நடத்துவதன் மூலம், வைத்தியசாலைகளில் கையிருப்பிலுள்ள மருந்துகள் குறித்த முழுமையான விபரங்களை முன்வைக்க தலைமை மருந்தாளருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதன் ஊடாக வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே இனங்காண முடியும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிராந்திய கொள்வனவுகள் மூலம் மருந்துகளைக் கொள்வனவு செய்து, நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்க முடியும். இதற்கு மேற்படி கூட்டங்களை நடத்துவசது மிகவும் அவசியமானவை.
வைத்தியசாலைகளில் எதிர்காலத் தேவைக்குத் தேவையான மருந்துகளை எப்போதும் கையிருப்பில் வைத்திருப்பது, மருந்து விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஒரு சாதகமான தீர்வாகும். சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் ஊடாக மருந்து விநியோக வலையமைப்பை சீரமைக்க நாம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும், சில சந்தர்ப்பங்களில் நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. அதனைத் தீர்ப்பதற்கே இவ்வாறான நேரடி கள விஜயங்களை மேற்கொள்கிறோம் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM