இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் கட்டுப்பாடு இல்லாத வகையில் டிஜிட்டல் திரையினை தொடர்ந்து பார்த்து வருவதால் அவர்களின் கண்களில் ஒவ்வாமையினால் உருவாகும் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது.
இதற்கு கண் வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனையும் அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தூசி, செல்லப்பிராணிகளின் பொடுகு, மகரந்தம், புகை ,சுற்றுச்சூழல்.. என பல்வேறு காரணிகளால் எம்முடைய கண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு உண்டாகிறது.
சிலருக்கு கண்கள் சிவந்திருக்கும். சிலருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்ணிலும் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும்.
இத்தகைய தருணங்களில் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று கண் சிகிச்சை நிபுணரை சந்தித்து, கண்களை முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அ
தன் பிறகு அவர்கள் பரிந்துரைக்கும் மருந்தியல் சிகிச்சையை முறையாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கண்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் அறிவுறுத்தும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் உறுதியுடன் பின்பற்ற வேண்டும்.
ஐந்து நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றாலும்... பார்வை திறனில் மாற்றம் ஏற்பட்டாலும் ... உடனடியாக வைத்தியர்களை சந்தித்தால், அவர்கள் உரிய சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
வைத்தியர் சுகன்யா தொகுப்பு அனுஷா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM