இரத்தினபுரி படுகெதர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு 11.50 மணியளவில் கார் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காரில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பாறை பகுதியினை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கெப் ரக வண்டியில் பயணித்த 5 பேரும் காயமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.