சுமார் 3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லவுள்ளது. 

புளோரன்ஸ் என அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 4.4 மில்லியன் மைல் தொலைவல் கடந்து செல்லவுள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்துடன் ஒப்பிடுகையில் 18 மடங்காகும். 

இந்த விண்கல் இதுவரை அறியப்பட்ட பூமிக்கு அருகில் கடந்து சென்ற விண்கற்களிலேயே மிகவும் பெரியதாகும். 

இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிய நேரிடும் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, ஆனால் அத்தகைய அசம்பாவிதம் இன்று இடம்பெறாது என உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த இராட்சத விண்கல் தரையிலுள்ள ராடர் அவதானிப்பு உபகரணங்கள் மூலம் விண்கல் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கு இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் அரிய வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு வழங்குவதாக உள்ளது என நாசா தெரிவிக்கிறது.