(நெவில் அன்தனி)
இந்தியாவின் புது டில்லியில் பெப்ரவரி 2 முதல் 14 வரை நடைபெற்ற ஆசிய குறிபார்த்து சுடுதல் (Rifle/Pistol) சாம்பியன்ஷிப் 2026 இல் இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.
தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், அணிநிலைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் இலங்கை வென்றெடுத்தது.
10 மீட்டர் தூரத்திலிருந்து காற்றழுத்த துப்பாக்கியைக் கொண்டு குறிபார்த்து சுடுதல் கனிஷ்ட பெண்கள் பிரிவு போட்டியில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்யாலயத்தில் சிரேஷ்ட மாணவி உமாயா ஆகர்ஷனி குமாரசிறி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

உமாயா குமாரசிறி மொத்தமாக 247.4 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
தகுதிகாண் சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் பிடித்ததன் மூலமே உமாயா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதிகாண் சுற்றில் இலங்கையைச் சேர்ந்த மூவர் பங்குபற்றியபோதிலும் உமாயா மாத்திரமே இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றார். அவரது சக வீராங்கனைகளான திமண்டி ரத்நாயக்க மற்றும் திவேஜா திசாநாயக்க ஆகிய இருவரும் தகுதிகாண் சுற்றுக்கு அப்பால் முன்னேறத் தவறினர்.
இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஓஜஸ்வி தக்கூர் 250.4 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், இந்தோனேசியாவின் யஸ்மின் அச்சாடியட் 226.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
10 மீட்டர் தூரத்திலிருந்து காற்றழுத்த கைத்துப்பாக்கியைக் கொண்டு குறிபார்த்து சுடுதல் பெண்களுக்கான அணி நிலை போட்டியில் இலங்கை 1631.27 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.
வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை பெண்கள் அணியில் சினாதி கொடிகார (விசாகா வித்தியாலயம்), ரெய்ன்யா ரணசிங்க (கண்டி, கலம்போ சர்வதேச பாடசாலை), பாஹிமா நுஹா ரஹுமான் (கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி) ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆசிய குறிபார்த்து சுடுதல் சங்கத்தினால் புதுடில்லி, டாக்டர் கார்னி சிங் குறிபார்த்து சுடுதல் அரங்கில் கடந்த 2ஆம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்ற இப் போட்டியில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர்.
இப் போட்டியில் 13 நாடுகள் பதக்கங்களை வென்றதுடன் ஒட்டுமொத்த பதக்கங்கள் நிலையில் இலங்கை ஒன்பதாம் இடத்தைப் பெற்றது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM