மெக்சிகோ நாட்டின் பல நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தட்டம்மை காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஜாலிஸ்கோ மாநிலத்தில் குவாடலஜாராவில் பகுதியில் இதுவரை 1,245 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வாரத்தில் 2.5 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் மெக்சிகோ நாடு முழுவதும் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த தீவிர சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பாடசாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM