கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

11 Feb, 2026 | 11:35 AM
image

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா  மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்படி, உயிரிழப்புகள் மூன்று வெவ்வேறு இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

டம்பிளர் ரிட்ஜில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்குள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வீடு ஒன்றிலிருந்து மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் தாக்குதலில் காயமடைந்த சுமார் 25 பேர் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

துப்பாக்கிதாரி கொல்லப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

பாடசாலை மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு இடையிலான தொடர்பு மற்றும் தாக்குதலின் பின்னணி குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொங்கோவில் எபோலாவால் 2,000 பேர் உயிரிழப்பு...

2026-08-13 17:36:33
news-image

ஐரோப்பிய, அத்திலாந்திக் வான்வெளியில் தென்பட்ட முழு...

2026-08-13 14:52:00
news-image

சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க சிங்கப்பூரை விட்டு...

2026-08-13 13:17:24
news-image

கோமியம் லீற்றருக்கு பத்து ரூபாய்… ;...

2026-08-13 12:03:52
news-image

இந்தியாவில் தம்பதியைக் கடித்துகுதறிய ‘பிட்புல்’ நாய்

2026-08-13 11:10:13
news-image

இந்திய டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜதந்திரம்: உலகளாவிய...

2026-08-13 10:34:18
news-image

இந்தோனேசியாவில் படகில் தீ விபத்து :...

2026-08-12 16:00:45
news-image

ஏரியில் படகு கவிழ்ந்தது ; சிம்பாப்வே...

2026-08-12 14:58:50
news-image

காதலியை கரம் பிடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ...

2026-08-12 12:16:42
news-image

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது...

2026-08-12 12:07:22
news-image

போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு :...

2026-08-11 16:32:23
news-image

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை...

2026-08-11 11:55:01