SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச போட்டியில் அமெரிக்காவை வென்றது பாகிஸ்தான்

Published By: Vishnu

10 Feb, 2026 | 10:55 PM
image

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் எஸ்எஸ்சி மைதானத்தில் முழு மின் ஒளிவெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்காவிடம் அடைந்த தோல்வியை பாகிஸ்தான் நிவர்த்தி செய்துகொண்டது.

அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பையும் பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டது.

கொழும்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்களவர் விளையாட்டுக் கழக (SSC) மைதானத்தில் மின் ஒளிவெள்ளத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்  முதல் தடவையாக  நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

ஸிம்பாப்வே - ஓமான் அணிகள் மோதிய ரி20 உலகக் கிண்ணப் போட்டி இதே மைதானத்தில் பகல் இரவு போட்டியாக 9ஆம் திகதி நடைபெற்ற போதிலும்  பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியே  முழுமையாக  மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியாகும்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.

சய்ப் அயூப் (19), சாஹிப்ஸதா பர்ஹான் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பவர்ப்ளே நிறைவில் பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந் நிலையில் சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

  

ஆனால், அவர்கள் இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (143 - 4 விக்)

அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த பாபர் அஸாம் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து சாஹிப்ஸதா பர்ஹான் 41 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் ஷதாப் கான் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷட்லி வன் ஷோக்வைக் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அமெரிக்கா சார்பாக நால்வர் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஆரம்ப வீரர்களான ஷயான் ஜஹாங்கிர் 49 ஓட்டங்களையும் அந்த்ரீஸ் கௌஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் மிலிந்த் குமார் 29 ஓட்டங்களையும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்ஹாம் ரஞ்சேன் 29 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39
news-image

149ஆவது நீல வர்ணங்களின் சமர்: ஜேடன்,...

2026-03-12 20:16:47
news-image

புனித பேதுருவானவர் றக்பி அணிக்கான ஜேர்சி...

2026-03-12 12:51:13
news-image

திரித்துவம் - புனித அந்தோனியார் மோதும்...

2026-03-12 10:28:56
news-image

109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் ...

2026-03-12 13:10:06
news-image

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2026-03-12 05:15:29
news-image

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெள்ளைப் பந்து...

2026-03-11 16:30:26
news-image

டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்...

2026-03-10 15:09:09
news-image

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக...

2026-03-09 19:42:23
news-image

நியூஸிலாந்தை 96 ஓட்டங்களால்  வீழ்த்தி மூன்று...

2026-03-08 23:35:05