உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகினார் ஹசரங்க; அவருக்கு பதிலாக துஷான் ஹேமன்த

Published By: Vishnu

10 Feb, 2026 | 10:01 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்றுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் எஞ்சிய போட்டிகளில் உபாதைக்குள்ளான இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனிந்து ஹசரங்கவுக்குப் பதிலாக துஷான் ஹேமன்தவை இணைத்துக்கொள்ள ஐசிசி தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆரம்ப ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது உபாதைக்கு மத்தியில் துல்லியமாக பந்துவீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றிய வனிந்து ஹசரங்க அணியிலிருந்து விலகியுள்ளது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

அத்துடன் அவர் அணியிலிருந்து நீங்கியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அப் போட்டியில் இடது தொடை தசைப் பகுதியில் ஏற்பட்ட வலியுடன் இரண்டாவது ஓவரை வீசிய வனிந்து ஹசரங்க அதன் பின்னர் அரங்கை விட்டு வெளியேறினார்.

8ஆவது ஓவருடன் வெளியேறிய அவர் 13ஆவது ஓவரில் களம் நுழைந்து 15ஆவது ஓவரில் உபாதையைப் பொருட்படுத்தமால் அணியின் வெற்றிக்காக மீண்டும் பந்துவீசி தனது 4 ஓவர்களைப் பூர்த்தி செய்தார்.

அப் போட்டியில் அவர் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கான் பரிசோதனையின்போது அவரது இடது தொடை தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அவர் உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தனது அடுத்த இரண்டு போட்டிகளை கண்டி பல்லேகலை விளையாட்டரங்கில் விளையாடவுள்ளது.

ஓமானுக்கு எதிரான போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியும் மிக முக்கிய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி பெப்பரவரி 16ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஸிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39
news-image

149ஆவது நீல வர்ணங்களின் சமர்: ஜேடன்,...

2026-03-12 20:16:47
news-image

புனித பேதுருவானவர் றக்பி அணிக்கான ஜேர்சி...

2026-03-12 12:51:13
news-image

திரித்துவம் - புனித அந்தோனியார் மோதும்...

2026-03-12 10:28:56
news-image

109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் ...

2026-03-12 13:10:06
news-image

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2026-03-12 05:15:29
news-image

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெள்ளைப் பந்து...

2026-03-11 16:30:26
news-image

டயலொக் ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்...

2026-03-10 15:09:09
news-image

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக...

2026-03-09 19:42:23
news-image

நியூஸிலாந்தை 96 ஓட்டங்களால்  வீழ்த்தி மூன்று...

2026-03-08 23:35:05