எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முதல் தடவையாக ஒளிவெள்ளத்தில் சர்வதேச கிரிக்கெட்; பாகிஸ்தான் - அமெரிக்கா மோதுகின்றன

Published By: Vishnu

10 Feb, 2026 | 07:09 PM
image

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பில் அமைந்துள்ள மிகவும் பழைமைவாய்ந்த எஸ்.எஸ்.சி. மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (10) முதல் தடவையாக ஒளிவெள்ளத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டி ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியாக நடைபெறுவதுடன் வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்தப் போட்டியில் ரி உலகக் கிண்ணத்தில் ஏ குழுவில் இடம்பெறும் பாகிஸ்தானும் அமெரிக்காவும் விளையாடுகின்றன.

இன்றைய போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அமெரிக்க அணித் தலைவர் மொனாங் பட்டேல் களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தார்.

இதற்கு அமைய பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

அணிகள்

பாகிஸ்தான்: சாஹிப்ஸதா பர்ஹான், சய்ம் அயூப், சல்மான் அகா (தலைவர்), பாபர் அஸாம், உஸ்மான் கான், மொஹம்மத் நவாஸ், பாஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்றிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அஹ்மத்.

ஐக்கிய அமெரிக்கா: அண்ட்றீஸ் கௌஸ், ஷயான் ஜஹாங்கிர், மொனாங் பட்டேல் (தலைவர்), மிலிந்த் குமார், ஷுப்மான் ரஞ்சேன், சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி, ஹார்மீத் சிங், மொஹம்மத் மொஹ்சின், ஷட்லி வன் ஷோக்வைக், சௌராப் நேத்ராவோக்கர், ஈ. ஆதில்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right