தமிழ் திரையுலகில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கலை சேவை செய்து வரும் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆழி 'எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' எனும் திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஜித் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டாரக்கரா சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இப்படத்தின் கதையை சரத் குமாரிடம் சொன்னபோது.. இந்த கதாபாத்திரத்தின் எதிர்மறை தோற்றத்தையும் உணர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவு செய்து நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்படத்தில் செல்லப் பிராணியான நாயும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. மேலும் இந்த கதை பெரும்பாலும் கடல் பகுதியில் நடைபெறுவதால் ஒலியும் ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெறும். இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM