விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

10 Feb, 2026 | 04:12 PM
image

விஜய் நடிப்பில் தயாரான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடுத்திருந்த வழக்கு திரும்ப பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழை வழங்க இந்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பாக அப்படத்தினை தயாரித்த கே வி என் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றமும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் விசாரித்தது. பிறகு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதியரசர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம்-‌ 'ஜனநாயகன்' படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப தீர்மானித்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனால் தற்போது இந்த திரைப்படத்தை தணிக்கை வாரியத்தின் மறு தணிக்கை குழுவினர் பார்வையிடுவார்கள் என்றும், அவர்கள் பரிந்துரைக்கும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இந்த நடைமுறை விரைவாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் விஜயின் 'ஜனநாயகன்' படம் இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்திலோ வெளியாக கூடும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25
news-image

வரவேற்பை பெற்று வரும் கென் கருணாஸின்...

2026-03-09 16:09:30
news-image

ஏப்ரலில் வெளியாகும் பரத்- அஜய் கார்த்தி...

2026-03-09 16:01:51
news-image

பெண்மணிகளின் வலிமையையும் , பொறுமையையும் உரக்கப்...

2026-03-09 15:42:22