பட மாளிகைக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பவர்களின் வயது இருபத்தைந்திற்குள் இருப்பதால் அவர்களின் மனங்களை கவரும் வகையிலான கதையையும்.. பாடலையும்... தங்களது படைப்புகளில் இடம்பெற வைத்து அதன் ஊடாக வெற்றி பெற்று வரும் படைப்பாளிகளில் விஜய் அண்டனி முதன்மையானவர். அவருடைய இசையிலும், தயாரிப்பிலும் உருவான 'பூக்கி 'எனும் திரைப்படத்தில் 'ஜில்லே ஜூஸ்' எனத் தொடங்கும் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பூக்கி ' எனும் திரைப்படத்தில் அஜய் திஷான் , ஆர். கே. தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், 'ஆதித்யா' கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, 'பிக் பொஸ்' சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். எழுத்தாளர் புதிய பரிதி கதை +திரைக்கதை+ வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் 'பூக்கி ' எனும் இப்படத்தில் இடம்பெற்ற 'ஜில்லே ஜூஸ்..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விஜய் அண்டனி எழுதி, அவரே பின்னணியும் பாடி இருக்கிறார். இந்தப் பாடலில் காதலில் ஏற்படும் பிரேக் அப்பின் ஏழு நிலைகளை நுட்பமாக விவரிப்பதால்....ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM