நடிகை நிவேதிதா சதீஷ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓ பட்டர்ஃபிளை' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் பிரபல இயக்குநரான ஏ. ஆர். முருகதாஸ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ பட்டர்ஃபிளை' எனும் திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், நாசர் , லட்சுமி பிரியா சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேதா ராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் சோம்நாத் இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆண்ட் ஹில் சினிமா மற்றும் பலாம்புர் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெங்கி -ஆனந்த் எஸ். ஷா- விஜய் ரங்கநாதன்- நிஷா பட்டியால்- சைதன்யா ஹெக்டே - டத்தா தாவே ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பட்டாம்பூச்சி ஒன்று அமானுஷ்ய ஆற்றலுடன் வலம் வருவதும்.. அது தொடர்பான சுவாரசியமான மற்றும் திகிலான பின்னணியும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM