கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

10 Feb, 2026 | 03:00 PM
image

இன்றைய சூழலில் பருவநிலை மாற்றம் காரணமாக எம்மில் பெரும்பாலானவர்களுக்கு தொண்டை பகுதியில் வலி ஏற்படுகிறது. இதற்காக பலரும் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறாமல், மருந்தகங்களுக்கு சென்று சுய மருத்துவம் செய்து நிவாரணத்தை பெறுகிறார்கள்.

ஆனால் இது முற்றிலும் தவறு என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் தொண்டை வலிக்காக நீங்கள் சுய மருத்துவம் செய்து கொள்ளும் போது வாய், தொண்டை ஆகிய பகுதிகளில் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தொண்டை வலிக்காக சுய மருத்துவம் மேற்கொள்ளும் நோயாளிகள் அதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை முறையாக மேற்கொள்ளாததால்.. அவர்களுக்கு வெவ்வேறு வகையினதான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

குறிப்பாக தேவையற்ற தருணங்களில் ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளையும், மருந்துகளையும் எடுத்துக் கொள்வதால்.. விவரிக்க இயலாத வகையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக பகுதியில் பாரிய பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது.

அத்துடன் தொண்டை வலிக்கான முறையான பரிசோதனையை மேற்கொள்ளாததால் கேண்டிடியாசிஸ் எனும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இவை பெரும்பாலும் வாய் தொண்டை மற்றும் தோல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி அரிப்பு, எரிச்சல் ஆகியவற்றை உண்டாக்குகிறது. 

அதிலும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம்.இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் நோயாளியை துல்லியமாக பரிசோதித்து, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தன்மையை அவதானித்து, அதற்கேற்ற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.

வைத்தியர் ஜனனி - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைச் சுகாதாரத் துறையின் எதிர்காலம்: தனியார்...

2026-03-10 15:46:44
news-image

மௌத் அல்சர் எனும் வாய் புண்...

2026-03-10 15:00:58
news-image

எபிகாஸ்ட்ரிக் வலிக்கான நவீன சிகிச்சை

2026-03-09 14:14:08
news-image

பித்தப்பை கொழுப்பு கட்டி பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-07 17:08:25
news-image

மீண்டும் மீண்டும் ஏற்படும் அரிதான மூளை...

2026-03-06 15:47:00
news-image

பைலெக்டாசிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-05 15:39:37
news-image

ஓகுலோபிளாஸ்ரி எனும் கண் பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-03-04 18:37:34
news-image

பிரியாணியை யார் பசியாற கூடாது..?

2026-03-03 17:16:32
news-image

உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் கால் பகுதியில்...

2026-03-02 15:01:52
news-image

பெருங்குடல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் ஹெமிகோலெக்டோமி...

2026-02-28 18:01:58
news-image

புரூரிட்டஸ் எனும் காதில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2026-02-27 16:48:36
news-image

நெஞ்சு வலியின் அறிகுறிகள் என்ன?

2026-02-26 16:37:37