இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அமெரிக்கா தனது சொந்த அணு ஆயுதச் சோதனைகளைத் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சாக்குப்போக்குகளை கூறிவருவதாக சீனா விமர்சித்துள்ளது.
ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நடந்த சோதனைகள் உட்பட, சீனா இந்த சோதனைகளை நடத்தியதாகவும், மேலும் அதிக வினைத்திறன் மிக்க சோதனைகளை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை செயலாளர் தாமஸ் டினானோ குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அமெரிக்கா சாக்குப்போக்குகளை புனைய முயற்சிக்கிறது. அமெரிக்கா அதன் பொறுப்பற்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அக்டோபரில், ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்து வருகின்றன. எனவே அமெரிக்காவும் அவர்களுக்குச் சமமான அளவில் அணு ஆயுதச் சோதனைகளைத் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டிற்காக இருந்த கடைசி முக்கிய ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்', கடந்த வியாழக்கிழமையுடன் காலாவதியானது.
இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், சீனா-ரஷ்யா-அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய புதிய அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தைக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.
ஆனால், தற்போதைய நிலையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என சீனா ஏற்கனவே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளால் சர்வதேச அளவில் ஒரு புதிய அணு ஆயுதப் உருவாகுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM