நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்: இரு இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!

10 Feb, 2026 | 09:35 AM
image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகர் - மாதகல் வீதியில் பொன்னாலே கோவில் அருகே அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்  ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காரைநகர், விக்காவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார். 

இதேவேளை, புத்தளம் - திருகோணமலை வீதியின் 17 ஆம் சந்தி பகுதியில், அனுராதபுரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, எதிரே வந்த நெல் ஏற்றிய கை உழவு இயந்திரத்துடன்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் கை உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அளுத்கம - புளியங்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஆவார். 

விபத்து தொடர்பில் 41 வயதுடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தம்புள்ளை - ஹபரணை வீதியின் திகம்பதன பகுதியில், ஹபரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், வேன் சாரதியும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37