அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும் சசிகுமாரின் 'மை லார்ட் '

09 Feb, 2026 | 06:33 PM
image

'அயோத்தி', 'கருடன்', 'நந்தன்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' என அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் படைப்புகளை வழங்கி அனைவரது விருப்பத்திற்குரிய நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் ' எனும் திரைப்படம் - அன்பும் , நம்பிக்கையும் தான் வாழ்க்கைக்கு தேவையானது என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மை லார்ட் 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஜெயபிரகாஷ் , ஆஷா சரத் , கோபி நயினார், வசு மித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார்.‌

எதிர்வரும் 13-ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான பாலா- லிங்குசாமி -மாரி செல்வராஜ் -ஏ. வெங்கடேஷ் - பிரேம்குமார் - த. செ. ஞானவேல்- விஜய் மில்டன் - ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மகாத்மா காந்தி , அண்ணல் அம்பேத்கார், சார்லி சாப்ளின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்ததன் மூலம்.. ஒரு மரணமோ ஒரு தோல்வியோ ஒரு துன்பமோ ஒரு மனிதனின் ஆற்றலை எதுவும் செய்திட இயலாது. அவன் வாழ்ந்த வாழ்க்கை மட்டும்தான் இந்த உலகத்தின் முன்பாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த நம்பிக்கை மட்டும் தான் வாழ்க்கை. என்பதை புரிந்து கொண்டேன். மேலும் நான் மனிதர்களை புரிந்து கொள்ள அவர்களுடன் ஓடிக்கொண்டே இருக்கிறேன். இறுதியில் நான் கண்டறிந்த உண்மை என்னவென்றால்... நம்பிக்கை ஒன்று தான் அனைவருக்கும் தேவை. அன்பும், நம்பிக்கையும் தவிர வேறு எதுவும் தேவைப்படுவதில்லை. சக மனிதர் மீது அன்பும், நம்பிக்கையும் செலுத்தினால் நீ தான் கடவுள். இதனைத் தான் இப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறேன். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியீட்டை...

2026-09-12 15:42:25
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-09-12 15:41:43
news-image

நடிகை சுமன் ராவ் நடிக்கும் 'தெய்வா'...

2026-09-12 15:39:15
news-image

நடிகர் ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப்...

2026-09-12 15:36:15
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'ஆகாயம்'...

2026-09-12 15:35:54
news-image

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும்...

2026-09-12 15:35:39
news-image

நடிகை முல்லையரசி நடிக்கும் 'பாவை' படத்தின்...

2026-09-12 15:33:58
news-image

‘வைகைப்புயல்’ வடிவேலுவுக்கு இன்று 67ஆவது பிறந்தநாள்!

2026-09-12 11:09:25
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'இம்மார்ட்டல்'...

2026-09-11 17:47:00
news-image

ஒக்டோபரில் வெளியாகும் பொலிவுட் நடிகர் அஜய்...

2026-09-11 17:44:39
news-image

கிஷன் தாஸ் நடிக்கும் 'சி யூ'...

2026-09-11 17:42:04
news-image

நடிகர் சச்சின் நாச்சியப்பன் நடிக்கும் 'சூரியன்...

2026-09-11 17:33:49