டித்வா புயலால் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானம் - உதய கம்மன்பில

09 Feb, 2026 | 07:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

டித்வா புயல் தாக்கத்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது. அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 25 சதவீதமான காணப்படுவதாக ஜனாதிபதிக்கு இரகசிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இது உண்மையில் நகைப்புக்குரியது.

தித்வா புயல் தாக்கத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீண்டுவிட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.அனைவருக்கும் நிவாரணம் வழங்கியுள்ளோம் என்று அமைச்சர்கள் குறிப்பிடுகிறார்கள். போதுமான நிதி கையிறுப்பில் உள்ளதாக மத்திய வங்கி குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பற்றி ஆராய்வதற்கு அரசாங்கம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொறுப்பளித்துள்ளது. அந்த நிறுவனம் கடந்த வாரம் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் அரசாங்கத்தின் மீது 25 சதவீதமான மக்களே நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு காணலாம். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது.நடைமுறைக்கு சாத்தியமற்ற காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை பிற்போடவே முயற்சிக்கிறது.

அரசாங்கம் தேசியத்துக்கும், பொது நிர்வாகத்துக்கும் எதிராக செயற்படும் போது 25 சதவீத மக்கள் இன்னும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளமை ஆச்சரியமாகவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைந்து விட்டது என்பதை அரசாங்கத்துக்கு சார்பான நிறுவனமே அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் ஒரு மாகாணத்தில் கூட அதிகாரத்தை கைப்பற்றாது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பெறுபேற்றை காட்டிலும் மிக மோசமான வாக்குகளே அரசாங்கத்துக்கு கிடைக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49