கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்கா கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, மீண்டும் கல்லூரிக்கு வருகை தரும் back to School நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (7) கல்லூரியில் நடைபெற்றது.
மேலும், விளையாட்டுப் போட்டியான Back to Sportmeet நிகழ்வும் கல்லூரி வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்பட்டதாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களான சுமித்ரா கார்மண்ட் உரிமையாளர் ஜெளபர் சத்தார், சிரேஷ்ட மேலதிக சொல்லிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்த்தன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அரவிந்த டி சில்வா, டேவிட் விக்ரமரட்ண நிறுவனத்தின் உரிமையாளர் மதுர விக்ரமரட்ண, ஹமீடியாஸ் நிறுவன உரிமையாளர் ஹுசைன் சாதிக், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முதலான பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது 2008 தீவிரவாத தாக்குதலில் பலியான கல்லூரியின் பேஸ்போல் விளையாட்டு வீரர்களுக்கும் கல்லூரியில் கல்வி கற்று நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக Back to school நிகழ்ச்சி கல்லூரியின் புதிய மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பழைய ஆசிரியர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM